Lifestyle and human interest
“மகாராஷ்டிராவின் பெண் புலி..” பிரபல மல்யுத்த வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது?

"மகாராஷ்ட்ராவின் பெண்புலி” என அழைக்கப்பட்ட தேசிய மல்யுத்த வீராங்கனை அஸ்வினி, தனது 3 குழந்தைகளுடன் நல்டுர்க் கோட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் பிரபல முன்னாள் மல்யுத்த வீராங்கணை அஸ்வினி மனோகர் பால். இவர் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அஸ்வினி, அதன்பிறகு 2008-ஆம் ஆண்டு குர்தாஸ்பூரிலும், 2009-ஆம் ஆண்டு சென்னையிலும் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததால், அஸ்வினி “மகாராஷ்டிராவின் பெண் புலி” என்ற பெயரால் பிரபலமாக அறியப்பட்டார்.
விளையாட்டு துறையில் மட்டுமல்லாமல், மும்பையில் உள்ள மகாராஷ்டிர பாதுகாப்புப் படையிலும் அஸ்வினி பணியாற்றி வந்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்தப் பணியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, தனது மூன்று குழந்தைகளுடன் உமர்கா தாலுக்காவில் உள்ள தாய்வீட்டில் அஸ்வினி வசித்து வந்துள்ளார். அஸ்வினியின் கணவர் மனோகர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படி, ஒருகாலத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கங்களை வென்று சாதித்த மல்யுத்த வீராங்கனையின் வாழ்க்கையில், தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மதியம், தனது ஐந்தரை வயது மகன் அஜிங்கியா மற்றும் இரண்டரை வயது இரட்டை மகள்களான வீரா, கிராந்தி ஆகியோருடன் நல்டுர்க் கோட்டைக்கு அஸ்வினி சென்றுள்ளார். சுமார் 105 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நல்டுர்க் கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொத்தளங்கள் உள்ளன.
