Economy, business and finance
ஓசூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, மூன்று பூ மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. தமிழகம், ஆந்திரா, கர்-நாடகா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்-னிட்டு, பூ மார்க்கெட்டுகளில் நேற்று பூக்கள் விலை கிடுகிடு-வென உயர்ந்தன.
நேற்று காலை, ஒரு கிலோ பட்டன் ரோஜா, 250 முதல், 300 ரூபாய்க்கும், மஞ்சள் சாமந்தி, 250 ரூபாய்க்கும், வெள்ளை சாமந்தி, 300 முதல், 350 ரூபாய்க்கும், செண்டுமல்லி, 50க்கும், மல்லி, 1,200 ரூபாய்க்கும், கனகாம்பரம், 1,600க்கும், முல்லை, 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகின. இன்று (செப்.13) விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்-டது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, பூக்களின் விலை அதிக-பட்சமாக, 3 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்-திக்கு பின், பூக்கள் விலை குறையும் என, வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழக எல்லை-யான ஓசூர் பகுதியிலுள்ள மக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை பண்டிகையை கொண்டாட, நேற்று முன்தினம் முதல், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்
சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், ஓசூர் நகரில் முக்கிய சாலைகளிலும் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்-தனர்.