Politics
இடஒதுக்கீடு போராட்ட தியாகி நினைவிடத்தில் அன்புமணி அஞ்சலி

பண்ருட்டி: வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் கொள்ளுக்காரன்குட்டையில் உயர்நீத்த தேசிங்கு நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். சொத்துபாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், டாக்டர் தமிழரசி, மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்த்திக், செல்வமகேஷ், மருத்துவரணி தலைவர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி தேசிங்கு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். தேசிங்கு குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வராஜ், குமாரசாமி, ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.