Arts, culture, entertainment and media
ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ஊத்துக்கோட்டை, ஆக. 7– ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில், கார், பைக், வேன் உள்ளிட்ட தனிநபர் வாகனங்கள்

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில், கார், பைக், வேன் உள்ளிட்ட தனிநபர் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் இருந்து, சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், சூலுார்பேட்டை, நெல்லுார், சத்தியவேடு உள்ளிட்ட இடங்களுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்குள்ள பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள், பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இந்நிலையில், பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில், தனிநபர்களின் இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்டவையும், அனுமதியின்றி ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், பயணியரை ஏற்றி, இறக்கிச் செல்ல முடியாமல், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றன.
தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பால், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், அவற்றின் உரிமையாளர்கள், வாடகை கூட கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகமும், பேருந்து பணிமனை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு, பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள தனிநபர் வாகனங்களை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.