Arts, culture, entertainment and media
மதுராந்தகம் பிடிஓ அலுவலகத்தில் பெண்கள் கும்மியடித்து போராட்டம்
மதுராந்தகம், செப். 10– - மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கொளம்பாக்கம் கிராம மக்கள், 100
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கொளம்பாக்கம் கிராம மக்கள், 100 நாள் வேலை மற்றும் முறையான குடிநீர் வழங்கக்கோரி கும்மியடித்து போராட்டம் நடத்தினர்.
மதுராந்தகம் ஒன்றியம், வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளம்பாக்கம் கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 40 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி, வையாவூர் ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வாரத்தில் இருநாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதே போல் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, உரிய ஊதியம் வழங்கவில்லை என தெ ரிவிக்கின்றனர்.
இதனால், கொளம்பாக்கம் பகுதியை சே ர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கும்மி அடித்து, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த மதுராந்தகம் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெண்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்த பின் அனைவரும் கலந்து சென்றனர்.