Education
தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்பாடுமோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் இயங்கும் தனியார் பஸ்களில் பயணிகள் பாதுகாப்பு விதிகள் பின்பற்றபடுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 8 தனியார் பஸ்கள் சோதனை செய்தனர்.
இதில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன், டிரைவர், கண்டக்டர் லைசென்ஸ், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யபடுகிறதா, பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் உள்ளதா, அனுமதிக்கபட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயங்குகிறதா என ராமநாதபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது– திருவாடானை, சிவகங்கை, தொண்டி மற்றும் பல ஊர்களுக்கு செல்லும் 8 தனியார் பஸ்கள் மீது ஆய்வு செய்யபட்டது. இந்த ஆய்வின் போது கண்டறியபட்ட குறைபாடுகள் மற்றும் விதிகளை மீறிய பஸ்கள் மீது எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கபடும். கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்றனர்.