Education
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம்: வாகன ஆய்வாளர் விசாரணை
காரைக்குடி:காரைக்குடியில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் குறித்து எழுந்த புகாரின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா சோதனை மேற்கொண்டார்.
காரைக்குடியில் இருந்து மதுரை, தேவகோட்டை, காளையார்கோயில், தொண்டி, திருவாடானை உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதே போன்று ஒரு வழிச்சாலையில் விதிகளை மீறி பயணம், ஏர் ஹாரன் என பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து நேற்று புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் சோதனை செய்தார். ஆய்வின் போது 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில், ஏர் ஹாரன், டிரைவர் கண்டக்டர் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.