Health
பெண்கள் குறித்து தி.மு.க.,வினர் அவதுாறு அமைச்சர் நிர்மல்குமார் புகார்
''சமூக வலைதளங்களில், போலி கணக்கு களை உருவாக்கி, தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவினர், பெண்கள் குறித்து அவதுாறு பிரசாரம் செய்கின்றனர்,'' என, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தே.மு.தி.க., - பிரேமலதா: மகளிர் குறித்து அவதுாறு பிரசாரம் செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறேன்.
அதேநேரம், த.வெ.க.,வினர் சிலரும், சமூக வலைதளங்களில், மகளிர் அரசியல் தலைவர்கள் குறித்து, அவதுாறு பிரசாரம் செய்கின்றனர். அவர்களை முதல்வர் கண்டிக்க வேண்டும்.
பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் யார் அவதுாறு செய்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - ஐ.டி., அணியினர், த.வெ.க.,வினர் பெயரில், போலியாக கணக்குகள் உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதுாறு பிரசாரம் செய்கின்றனர்.
பல்வேறு பிரபலங்கள் பெயரிலும், அரசியல் தலைவர்கள் பெயரிலும், போலி கணக்குகளை உருவாக்கி, அவர்கள் தான் அவதுாறு பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.,வினர் தான் இந்த வேலையை செய்கின்றனர்.
அமைச்சர் ஆனந்த்: எங்கள் கட்சியினர் யாராவது, பெண்கள் குறித்து அவதுாறு பிரசாரம் செய்வது தெரியவந்தால், உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.