Politics
உளுந்துார்பேட்டையில் வரும் 19 ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை பாலியில் வரும் 19 ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பத்மஜா செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது. உளுந்துார்பேட்டை பாலியில் உள்ள ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 19 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.
முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற தமிழக அளவிலும், கள்ளக்குறிச்சி மற்றும் மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
முகாமில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வி தகுதிகளுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பயோ– டேட்டா, அனைத்து கல்வி சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.