Lifestyle and human interest
ட்ரெண்டாகி வரும் 80’s போட்டோஸ்... ஏ.ஐ செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?

புகைப்பட காலப்பயணத்திற்கு பொருட்செலவோ, எடிட்டிங் தொழில்நுட்பமோ தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கையில் ஸ்மார்ட் போனும், சாட் ஜிபிடி செயலியும், சில பிராம்ப்ட்களும் போதும். இப்படி ஒரு கூட்டமே மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் இந்த புகைப்படங்களை உருவாக்க எவ்வளவு தொகை செலவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
கடந்த சில நாட்களாக சமூகவலைதளப் பக்கங்களில் ஏஐ ட்ரெண்ட் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சமூக வலைதள பக்கங்களைத் திறந்தாலே 1980-களில் வாழ்வதை போன்ற உணர்வு ஏற்படும் அளவிற்கு அனைவரும் தங்கள் புகைப்படத்தை 80ஸ் காலக்கட்டத்திற்கு மாற்றி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
