Lifestyle and human interest
இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்த 80s லுக் ட்ரெண்ட்; ChatGPT-ல் உருவாக்குவது எப்படி? டிப்ஸ்!

Viral 80s Photo Trend | தற்போது டிரெண்டிங்கில் உள்ளதுபோல போட்டோ மற்றும் வீடியோவை எப்படி உருவாக்குவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்ஸ்டாகிராமில், 1980களில் நாம் எப்படி இருப்போம் என்பது குறித்த ட்ரெண்ட் வைரலாகி வருகிறது. இது தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
இந்த நிலையில், AI-ஐ உபயோகித்து உங்கள் புகைப்படத்தையும் 80களில் இருப்பது போன்று மாற்ற முடியும். அந்த வகையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ளதுபோல போட்டோ மற்றும் வீடியோவை எப்படி உருவாக்குவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
80s ட்ரெண்ட்...
உலகமே இப்போது 1980க்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். குழம்ப வேண்டாம். பல லட்சக்கணக்கான பயனர்கள் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராம் தளத்தில் 80களில் நாம் பார்க்க எப்படி இருப்போம் என்று AI உதவியுடன் பலர் தங்களின் போட்டோக்களை கிரியேட் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
ChatGPT...
இதற்கு முதலில் உங்கள் போட்டோவை ChatGPTல் அப்லோட் செய்ய வேண்டும். அந்தப் புகைப்படத்தை 1980-களில் எடுக்கப்பட்டது போல உருவாக்குமாறு ChatGPT-யிடம் கேட்க வேண்டும். அதற்கு, “Recreate this photo as if it were taken in the 1980s" என்கிற Prompt-ஐ உள்ளிட வேண்டும்.
Prompt...
மேலும், உங்களுக்கு எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல், உடை, நகை, பேக்ரவுண்ட், லைட், விண்டேஜ் ஸ்டைல் உள்ளிட்டவை வேண்டும் என்று நீங்களே சொல்லலாம். உதாரணத்திற்கு, Transform my photo into an authentic 1985 studio portrait, keep my face, jawline, skin tone, eyes unchanged என்று உள்ளிட்டால், உங்கள் முக அமைப்பு எதுவும் மாறாமல், அதேநேரத்தில் 80களில் இருக்கும் போட்டோ போல உங்கள் போட்டோ வழங்கும்.
மேலும், உங்கள் போட்டோக்களை, Kollywood hero, heroine, wedding album, 1980s old family photo India உள்ளிட்ட Promptகளை உள்ளிட்டும் போட்டோவை கிரியேட் செய்யலாம்.
