Politics
‘சேவையால் பெறும் மனநிறைவே உண்மையான வெற்றி’
சென்னை, செப். 15– ‘‘சேவைகளால் பெறும் மனநிறைவே, உண்மையான வெற்றி என்பதை, குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்,’’ என,

‘‘சேவைகளால் பெறும் மனநிறைவே, உண்மையான வெற்றி என்பதை, குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்,’’ என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
டி.வி.எம்., சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின், 29 ம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நிறுவனர் இருளப்பன் தலைமையில், சென்னை தேவநேய பாவணர் அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேசியதாவது:
தமிழ் மொழி – தமிழர் நாகரிகம் என்பது உலகில் காணக் கிடைக்காத தொன்மையான பொக்கிஷங்களை உள்ளடக்கியது.
தியாகமும், நற்பண்பு நிறைந்த சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்களே மிக அழகானவர்கள் என, அவ்வையார் தெரிவித்துள்ளார்.
அதிக மதிப்பெண், உயர்ந்த பதவி, அளவற்ற செல்வம் பெறுவது தான் உண்மையான வெற்றி என நினைக்கிறோம்.
வாழ்வில் நாம் செய்யும் சேவைகள் மூலம் பெறும் மனநிறைவு தான் வாழ்க்கையின் உண்மையான வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை, குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். இளைய தலைமுறையினர் மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதன் மூலம், சேவைகள் செய்ய முடியாது. சமூக சேவை ஆற்றுபவர்கள்தான் மக்கள் மனதில் நிலைப்பர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், செஞ்சிலுவை சங்க முன்னாள் தலைவர் வடிவேல் முகுந்தன், கோத்தாரி பெட்ரோ நிறுவன இயக்குனர் ராஜவேல், டாக்டர்கள் நெல்லையப்பர், திருவருள், சேவா பாலம் அமைப்பின் செயலர் பெஞ்சமின் உட்பட பலர் பங்கேற்றனர்.