Arts, culture, entertainment and media
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (செப். 18 - 24)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான மொத ராத்திரி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.
நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.
பிரியா பவானி ஷங்கர், பேபி நக்ஷத்திரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ரியோ நடித்துள்ள ராம் அண்ட் லீலா திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.
நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக வர்திகா நடித்துள்ளார். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
அங்கீகாரம் படத்தின் போஸ்டர்.
இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ராஜேஷ் நடித்துள்ள அங்கீகாரம் திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுககியுள்ள துடக்கம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக உருவான இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள் சித்தார்த், தமன்னா, அதிதி ராவ் நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடர் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் நாளை (செப். 18) வெளியாகிறது.
இந்த சீசனுக்கான குறும்படங்களை இயக்குநர்கள் விக்ரமாதித்யா மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பத்ரா, விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
7கடந்த வார ஓடிடி (விஸ்வநாத் அண்ட் சன்ஸ்)
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போஸ்டர்.
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள திரைப்படம் மகுடம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Modha rathri, irumudi has been released on an OTT platform tommorow (Sept. 18)
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.