Arts, culture, entertainment and media
‘மொத ராத்திரி’ பட ஓடிடி அப்டேட்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் காமெடி கலாட்டாவுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே படத்தின் தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பு நடந்த டிரெய்லர் வெளியீட்டில் கார்த்திக் சுப்புராஜ், அயலான் ரவிகுமார், டியூட் கீர்த்தீஸ்வரன், பாரி இளவழகன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து சூரி, கார்த்திக் சுப்புராஜ், சிம்பு, ‘நந்தன்’ இயக்குநர் இரா.சரவணன் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக படத்தை பாராட்டியிருந்தனர். தொடர்ந்து பலரது பாராட்டை பெற்று வந்த இப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 18ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் தமிழைத் தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இது வெளியாகிறது. ஏற்கனவே திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடி-யிலும் அதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This is not a wedding story, this is a first night story 🤭😝 pic.twitter.com/A7AYcWi5g3
— Netflix India South (@Netflix_INSouth) September 16, 2026
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)