Politics
ஒரே ஃப்ரேமில் பிரதமர் மோடி, ரஷ்யா, சீனா அதிபர்கள்.. இணையத்தில் வைரலாகும் பிரிக்ஸ் மாநாடு ஃபோட்டோ..

இந்த மாநாடு, உலகப் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தியாவின் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் இரண்டாம் நாளில், உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மையப்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிற்க, அவரது இருபுறமும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
