Lifestyle and human interest
எரியாத விளக்குகள்: இருட்டில் தடுமாறும் பொதுமக்கள்
சாய்ந்த மின்கம்பம் பாப்பநாயக்கன்புதூர், சாஸ்திரி வீதி 2-ல் மின்கம்பம் விழுந்து 3 ஆண்டு ஆகிறது. இன்னும்

பாப்பநாயக்கன்புதூர், சாஸ்திரி வீதி 2-ல் மின்கம்பம் விழுந்து 3 ஆண்டு ஆகிறது. இன்னும் புதிய கம்பம் அமைத்து தெரு விளக்கு பொருத்தவில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க ரோடு தோண்டி, ஒரு மாதத்திற்கு மேல் அப்படியே உள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
மணியக்காரம்பாளையம் செந்தில் வெள்ளவன் நகரில் உள்ள தெரு விளக்கு 2 மாதமாக எரியவில்லை. இதனால் இருட்டில் பொதுமக்கள் விழுந்து எழுந்திருக்கும் நிலை உள்ளது.
வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோடு, அண்ணா தெருவிலும் தெரு விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இரவில் நடந்து செல்ல பயமாக இருக்கிறது. தெரு விளக்கை தாமதம் இல்லாமல் சரிசெய்ய வேண்டும்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் எச்.டி.எப்.சி. வங்கி கட்டடம் அருகில், சாலையிலேயே பலர் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்; அல்லது உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
திருச்சி ரோடு, ஹைவேஸ் காலனி அருகே ரோட்டோரம் மணல் குவிந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கப்பட்ட அம்மா குடிநீர் மையம் மூடியே கிடக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்.
மீதி ரோடு எங்கே?
மருதமலை ரோட்டில் முல்லை நகர் பகுதியில் பாதி ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.