Politics
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலம்: மயிலம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தீவனுாரில் நடந்தது.
மாவட்டஅவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் சிறப்புரையாற்றினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கட்சிப் பணிகள் குறித்து பேசினார். விவசாய அணி அமைப்பாளர் செந்தமிழ்ச் செல்வன், மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ராஜாராமன், மணிமாறன், செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடந்த 28ம் தேதி தலைமை செயற்குழு கூட்டத்தில் கழக சீரமைப்பு பணிகள் குறித்த தீர்மானத்தின் ஆலோசனையும், கட்சி வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
வடிவேல் மயிலம் ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.