பலாத்காரம் செய்தவரை தாக்கியோர் மீது வழக்கு
வடமதுரை:சுக்காம்பட்டி பாலம்பூசாரியூரை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பால்சாமி 27. தேங்காய் வெட்டும் தொழில் செய்யும் இவர், கரிகால கவுண்டனுார் தோட்டத்து வீட்டில் தனியே வசித்த 65 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். தப்பியோடிய பால்சாமியை அப்பகுதியினர் விரட்டி பிடித்து கயிற்றால் கட்டி வைத்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக தாக்கப்பட்டதால் காயம் ஏற்பட்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் கைது செய்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் பால்சாமியை தாக்கியதாக 4 பேர் மீது அவரது தந்தை அய்யாவு புகாரில் வடமதுரை போலீசார் வழக்கு பதிந்தனர்.