மூதாட்டியை பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி போலீசில் ஒப்படைத்த கிராமத்தினர்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கும் 65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி வாலிபரை கிராமத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சுக்காம்பட்டி பாலம்பூசாரியூரை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பால்சாமி 27. தென்னை மரங்களில் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். மனைவி, மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் பால்சாமி, கரிகால கவுண்டனுார் தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கும் 65 வயது மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது மூதாட்டி வீட்டிற்கு பால் கறவைக்கு சென்ற தொழிலாளியை கண்டு அவர் தப்பியோடினார்.
காயமடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மீட்டு திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே அப்பகுதியினர் சிலர் பால்சாமியை விரட்டி பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். வடமதுரை போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
பால்சாமிக்கு லேசான காயங்கள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலை சீரானதும் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.