மாவலி பதில்கள்

நேபாளத்தில் சடலங்களிலுள்ள நகைகளைத் திருடும் வீடியோக்கள் வெளியாகி திடுக்கிட வைக்கிறதே, மனிதம் மரணித்துவிட்டதா?
கடந்த மாதம் அசாமில் கடுமையான வெள்ளம். சிவசாகர் மாவட் டத்தைச் சேர்ந்த ஒரு பெண் இடுப் பளவு வெள்ள நீரில் நடந்து சென்று, மீட்புப் பணியில் ஈடு பட்டிருந்த தன்னார்வலர் களுக்கு தானே தயாரித்த பழச்சாறை வழங்கினார். அந்தப் பெண்ணும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்தான். திரு வனந்தபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய பென்னி என்னும் முதிய பெண்மணியை, தனது லைப்ஜாக் கெட்டைக் கொடுத்து காப்பாற்றி விட்டு உயிரைவிட்டார் மீட்புப் படையைச் சேர்ந்த ராஜேஷ். மனிதர்களில் இப்படியும் உண்டு. அப்படியும் உண்டு.
தமிழக நலனுக்காகவே மேகதாது அணை என்கிறாரே கர்நாடகா முதல்வர் சிவகுமார்?
"உன் சொத்தைப் பிடுங்கிக்கிட்டா உனக்கு உத்வேகம் வரும். போராடி நீ வாழ்க்கையில ஜெயிச் சுடுவ. அதனால, உன் வீட்டை நான் எடுத்துக்கிட் டது உன் நன்மைக்குத்தான்'”என்று பக்கத்து வீட்டுக்காரன் சொன்னால் நாம் நம்புவோமா?
கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.
"ஒலிம்பிக்கின் பாதி விளையாட்டுகளில், நாம் பங்கேற்பதில்லை' என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளது குறித்து?
12 ஆண்டுகளாக மோடிதான் இந்தியப் பிரதமர். ஒலிம்பிக்கில் இந்தியா எல்லா போட்டிகளி லும் கலந்துகொள்ளவேண்டும். நிறைய பதக்க அறுவடை செய்யவேண்டுமென்றால் யார் அக்கறை காட்டியிருக்கவேண்டும்? தவிரவும், அண்டை நாட்டு குஸ்தி வீரர்களுடன் மல்யுத்தம் பண்ணுவதைவிட, நம் நாட்டு அதிகார வர்க்கத்தினருடன் குஸ்தியும், நாட்டின் தலைநகரில் போராட்ட கட்டில் குஸ்தியும் போட வேண்டியிருந்தால், வீரர்கள் விளையாட ஆர்வமாக முன்வருவார்கள் என்று நம்புகிறாரா பிரதமர்?
செந்தில்குமார். எம், சென்னை.
நடக்கமுடியாத தாயை ரயில் தண்டவாளத்தில் தள்ளிப் படுகொலை செய்த மகனை என்ன செய்வது?
திருத்தணி அருகேயுள்ள மணவூர் பார்த்த சாரதியைக் குறிப்பிடுகிறீர்களா! அவர் பார்த்தசாரதி இல்லை... படுகேவல சாரதி. இவர்களுக்காகவாவது நீதித்துறை தூக்குத் தண்டனையை முற்றிலும் கைவிட்டுவிடக்கூடாது.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சர் மரியவில்சனை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறாரே அன்பில் மகேஷ்..?!
நியாயமான கோரிக்கைதானே. சட்டமன்ற உறுப்பினராயிருந்துகொண்டு அநீதியை மறைக்கத் துணைபோகலாமா நிதியமைச்சர்! வாங்குறவனையும் விடமாட்டேன், கொடுக்கிற வனையும் விடமாட்டேன்னு பஞ்ச் வசனம் பேசின முதல்வரும் மௌனமாயிருப் பது சரியான அணுகு முறையில்லை.
சிவா, கல்லிடைக்குறிச்சி.
சோனியா சுயசரிதையில் என்ன பிழை உள்ளது?
சோனியா தனது சுயசரிதையான இங்ப்ர்ய்ஞ்ண்ய்ஞ்: ஆ ஓர்ன்ழ்ய்ங்ஹ் ர்ச் கர்ஸ்ங் புத்தகத்தை பென்குயின் புத்தகம் வெளியிட முன்வந்தது. ஆனால் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு ஆட்சிக் காலகட்டம், அதில் ஆர்.எஸ்.எஸ். ஸின் பங்கு, இங்கு நடந்த மதப்பிரிவினை, கலவரங் கள், மோடி ஆட்சியில் சிறுபான்மையினரின் நிலை, சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு சர்ச்சை, எல் லைத் தகராறு பற்றிப் பேசும் பகுதிகளை நீக்க அரசு அழுத்தம் தருகிறது. சோனியா தரப்பு மறுக்கிறது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு.
இந்தியா டுடேயின் பிரதமர் கருத்துக்கணிப்பு பற்றி?
ஜனவரியில் நடந்த கருத்துக் கணிப்பில் 55% மக்கள் ஆதரவு பெற்றிருந்த மோடி, 48.7%க்கு இறங்கியுள்ளார். புதிதாக விஜய்க்கு 9.2% கிடைத் துள்ளது. கருத்துக் கணிப்பெல்லாம் நடத்துகிறார் களா இல்லை எல்லாம் டேபிள்வொர்க்கா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.
என்றும் இளமையாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க என்ன செய்யவேண்டும்?
என்றைக்கும் இளமை, சுறுசுறுப்புடன் இருக்கவேண்டுமென்பது மனிதனின் பேராசை, கற்பனை மட்டுமே. சாத்தியமில்லை. இளமை, வாழ்வின் ஒரு அத்தியாயம் மட்டும்தான். அதிகபட்சம் ஒழுக்கமான வாழ்வின் மூலம் இளமை சீக்கிரம் தீராமல் பார்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி, வாழ்க்கை முறையின் மூலம் சுறுசுறுப்பைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
ம.பி.யில் இளைஞரொருவர் தன் வெள்ளைநிற காரில் தன் காதலியின் லிப்ஸ்டிக் முத்தத்தை 3400 முறை பதித்ததற்காக, போலீஸிடம் அபராதம் கட்டியிருக்கிறாரே?
காரை, லிப்ஸ்டிக் உதட்டால் 3400 முறை முத்தமிட வைத்து, காதலியை சித்ரவதை செய்ததற்காக ஆறு மாதம் சிறைக்குள்ளேயே தள்ளலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)