Lifestyle and human interest
போக்குவரத்து விதிமீறல்: ஓராண்டில் 95,568 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட, 95,568 பேரின் ஓட்டுநர் உரிமம், 'சஸ் பெண்ட்' செய்யப்பட்டுள்ள தாக, போக்குவரத்து ஆணை யரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்து விதிமீறல்களுக்கு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும், 95,568 ஓட்டுநர் உரிமங்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக, மொபைல் போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டிய, 23,295 பேரின் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, அதிவேகம், வாகனங்களில் அதிக பாரம், மது அருந்தி வாகனங் கள் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களிலும், ஓட்டு னர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் மட்டுமே, 23,496 பேரின் ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.