Arts, culture, entertainment and media
அண்ணாதுரை பிறந்தநாள்: தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
சேலம்:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 118வது பிறந்தநாளை ஒட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு, தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில், மாநகர அவைத்தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செயற்குழு உறுப்பினர் மணி, மாநகர துணை செயலர் கணேசன், பகுதி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில், மாநகர் மாவட்ட செயலர் பாலு தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பகுதி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ் சங்கம் சார்பில் செயலர் வரத செயக்குமார், மரியாதை செலுத்தினார். த.வெ.க., சார்பில், சேலம் மத்திய மாவட்ட இணை செயலர் சுப்ரமணி, அம்மாபேட்டை காந்தி மைதானத்தில், அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்தார்.ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள அண்ணாதுரை சிலைக்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். ஓமலுாரில், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமையில், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, சங்ககிரி எம்.எல்.ஏ., வெற்றிவேல் உள்ளிட்டோர், மரியாதை செலுத்தினர். ஆத்துார், கோட்டையில் அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் மாலை அணிவித்தார். ஆத்துார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தாரமங்கலத்தில், நகர தி.மு.க., சார்பில், செயலர் குணசேகரன் தலைமையில், அண்ணாதுரை சிலைக்கு, கட்சியினர் மாலை அணிவித்தனர். அதேபோல் நகர அ.தி.மு.க., சார்பில், மாலை அணிவித்தனர். நகர செயலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தி.மு.க., அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலர் விஜயகுமார் தலைமையில், உடையாப்பட்டியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலர் ரத்தினவேல் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் அ.தி.மு.க., அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர், மரியாதை செலுத்தினர்.இடைப்பாடியில் அண்ணாதுரை படத்துக்கு, தி.மு.க., சார்பில் நகர அவைத்தலைவர் மாதையன்; அ.தி.மு.க., சார்பில் நகராட்சி கவுன்சிலர் நாராயணன் மரியாதை செலுத்தினர். சேலம் பெரியார் பல்கலை அண்ணா இருக்கை சார்பில், அண்ணா பிறந்தநாள் பொழிவரங்கம் நடந்தது. கலைஞர் ஆய்வு மைய இயக்குனர் சுப்ரமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சிறப்பு நிலை தமிழ் துறை தலைவர் அறவேந்தன், 'அண்ணாதுரை பார்வையில் மரபும் நவீனமும்' தலைப்பில் பேசினார்.