Arts, culture, entertainment and media
எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள் - சர்வதேச தளத்தில் ‘டோரதி’ படத்திற்கு பாராட்டு!

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540வது படமாகும். இவரது இசையில் வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல்கள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் பின்னணி இசை நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை படம் வெளியாவதற்கு முன்பு நேரடியாக இசைக்கப்பட்டதும் அதை ஒரு ஆல்பமாக வெளியிடப்பட்டதும், இதுவே முதல் முறை.
இந்த நிலையில் இப்படம் கனடாவில் நடக்கும் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் முறையாக ப்ரீமியர் செய்யப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அங்கு இப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டைத் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)