ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில மாநாடு

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு நடந்தது. நினைவுக் கொடியேற்றம் ஏற்றப்பட்டது.
மாநில தணிக்கையாளர் தமிழ்வாணன் அஞ்சலி அறிக்கை வாசித்தார். மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்து பேசினார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ராஜசேகரன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் புகழேந்தி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பேசினர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை மாநில அமைப்பாளர் குமரேசன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், வருவாய் கிராம உதவியாளர் சங்க பொதுச் செயலாளர் குருநாகப்பன் வாழ்த்தினர்.
மாநில துணைத் தலைவர்கள் ராமநாதன், பாஸ்கர் பாபு, சார்லஸ் சசிக்குமார், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கோரிக்கை தீர்மானங்களைமுன்மொழிந்தனர்.
மாலை நடந்த கருத்தரங்கில் மாநிலத் துணைதலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். காந்தி கிராமம் ஓய்வு பேராசிரியர் பழனித்துரை பேசினார்.