Religion
ஆவணி மாத சர்வ அமாவாசை - அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்..

ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அங்குள்ள புரோகிதர்களிடம் எள்ளு, பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர், ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 21 புனித தீர்த்த கிணறுகளில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.