Politics
தி.மு.க., மாவட்ட செயற்குழுக் கூட்டம்
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது.
கடலுார் கிழக்கு மாவட்ட தி,.மு.க., நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே கலையரங்கத்தில் வரும் 12ம் தேதி நடக்கிறது. கூட்டத்திற்கு தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்குகிறார்.
தலைமைக் கழக பிரதிநிதிகள் அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி எம்.பி., அயலக அணி துணைச் செயலாளர் பரிதி இளம்சுருதி முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், ஒன்றிய, நகர, கிளை அமைப்புகள் மறுசீரமைப்பு மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடக்கிறது. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலுார் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.