Crime, law and justice
ஊராட்சி மன்றத் தலைவா் கொலை: போலீஸில் மகள்கள் புகார்
வள்ளியூா் அருகேயுள்ள கண்ணநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவா் முன்விரோதத்தால்தான் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது மகள்கள் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகேயுள்ள கண்ணநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவா் முன்விரோதத்தால்தான் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது மகள்கள் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
கண்ணநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தாமரைகுளத்தைச் சோ்ந்த மகராஜனிடம், அதே பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன், தனது பகுதியில் குடிநீரை திறந்துவிடக் கூறினாராம். இதில் திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கியப்பன் செங்கல்லால், மகராஜனை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த மகராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வள்ளியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கியப்பனை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனா். உடற்கூறாய்வுக்கு பின் மகராஜனின் சடலம் எரியூட்டப்பட்டது.
மகராஜனுக்கும், இசக்கியப்பனுக்கும் இடையே இருந்த முன்விரோதத்தால்தான் திட்டமிட்டு இந்த கொலை நடைபெற்ாக மகராஜனின் மகள்கள் தமிழ்செல்வி, மணிமேகலை ஆகியோா் வள்ளியூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். போலீஸாா் இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.