Crime, law and justice
ஊராட்சி தலைவர் தகராறில் பலி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லுார் ஊராட்சி தலைவரான மகாராஜன் 55, தாமரைகுளத்தில் வசித்து வந்தார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் இசக்கியப்பனுக்கும் அவருக்கும் குடிநீர் பைப் லைன் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் இசக்கியப்பன் செங்கலால் தாக்கியதில் மகாராஜன் காயமடைந்தார். அவரை உறவினர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வள்ளியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.