Sport
சிட்டி ஸ்போர்ட்ஸ் // மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் பிரிவு விளையாட்டுப் போட்டி நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பயிற்சியாளர் ரஞ்சித்குமார் ஏற்பாடுகளைச் செய்தனர். காது கேளாதோர் ஆடவர் பிரிவு கபடி போட்டியில் கருப்பாயூரணி அணி முதலிடம், உதயா பிரதர்ஸ் அணி 2ம் இடம், ஒய்.எம்.சி.ஏ., – ஏ அணி 3ம் இடம் பெற்றன. அறிவுசார் குறைபாடுடைய ஆடவர் பிரிவு எறிபந்து போட்டியில் ரைஸ் பள்ளி முதலிடம், பெத்சான் பள்ளி 2ம் இடம், குரு கிருபா பள்ளி 3ம் இடம் பெற்றன.
மகளிர் பிரிவு எறிபந்து போட்டியில் அன்பகம் பள்ளி முதலிடம், ரைஸ் பள்ளி 2ம் இடம், பெத்சான் பள்ளி 3ம் இடம் பெற்றன. ஸ்டாண்டிங் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜனனி முதலிடம், செல்வி 2ம் இடம், பூங்கொடி 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் ஜனனி, பூங்கொடி ஜோடி முதலிடம், இளையராணி, ஈஸ்வரி ஜோடி 2ம் இடம், செல்வி, அக்கம்மாள் ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
பார்வையற்றோருக்கான வாலிபால் ஆடவர் பிரிவில் மதுரை டெம்பிள் சிட்டி முதலிடம், கிங் ஆப் கோப்ரா 2ம் இடம், அகவிழி மதுரை 3ம் இடம் பெற்றன. மகளிர் பிரிவில் வீரமங்கை அணி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி ஏ அணி 2ம் இடம், பி அணி 3ம் இடம் பெற்றன.