Sport
வீல்சேர் டேபிள் டென்னிஸ்
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது.
வீல்சேர் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆரோக்கிய மைக்கேல் ராய் முதலிடம், மணியரசு இரண்டாமிடம், முத்துக்கழுவன் மூன்றாமிடம் பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் ஆரோக்கிய மைக்கேல் ராய், மணியரசு ஜோடி முதலிடம், சரவணகுமார், எட்வர்ட் பிரான்சிஸ் ஜோடி இரண்டாமிடம், வெங்கடேஷ், ராஜா ஜோடி மூன்றாமிடம் பெற்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் லட்சுமி முதலிடம், பாக்கிய லட்சுமி இரண்டாமிடம், வீரசெல்வி மூன்றாமிடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் லட்சுமி, வீரசெல்வி ஜோடி முதலிடம், பாக்கியலட்சுமி, வீராயி ஜோடி இரண்டாமிடம், காளீஸ்வரி, இந்துமதி ஜோடி மூன்றாமிடம் பெற்றது.