Politics
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எம்.எல்.ஏ.,விடம் மனு
திருமுக்கூடல், செப். 18– திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் கொடி மரம் அமைத்து மஹா
திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் கொடி மரம் அமைத்து மஹா கும்பாபிஷேகம் நடத்தக்கோரி, த.வெ.க., – எம்.எல்.ஏ., முனிரத்திவிடம், அப் பகுதி மக்கள் நேற்று மனு அளித்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஐந்து உத்சவங்கள் நடைபெறுகின்றன.
இதற்கு முன், இக்கோவிலில், 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கோவில் மூலஸ்தானத்தின் விமான கோபுரம் மற்றும் கொடி மரம் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த பழைய கொடி மரத்திற்கு மாறாக கடந்த ஆண்டில் திண்டுக்கல்லில் இருந்து, 32 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம், ஹிந்து சமய அறநிலையத் துறை மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அக்கொடி மரம் அமைக்க அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
எனவே, திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் அமைத்து பழுதடைந்த விமான கோபுரத்தை புனரமைத்து மஹா கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடத்தில் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.