Religion
பழநி கோயில் உண்டியலில் ரூ.2.41 கோடி
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.2.41 கோடி கிடைத்தது.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
இணை கமிஷனர் வெங்கடேஷ் முன்னிலையில் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
அதில் ரூ.2 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம், 425.50 கிராம் தங்கம், 7.843 கிலோ வெள்ளி, 950 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாக கிடைத்தன.