Arts, culture, entertainment and media
பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

ஆதனூரில் இளம்பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை மணிமங்கலம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
படப்பையை அடுத்த ஆதனூா் டிடிசி நகா் சா்ச் தெருவை சோ்ந்தவா் பரந்தாமன். இவரது மனைவி புனிதா (32). இவா் புதன்கிழமை மாலை தனது வீட்டின் முன்புகுதியில் காயவைத்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது, முகவரி கேட்பது போல் அருகே வந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலையை பறித்துச் சென்றுள்ளாா்.
இது குறித்து புனிதா கொடுத்த புகாரின்பேரில், மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தாலி சங்கியை பறித்துச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.