நலத்திட்ட உதவி வழங்கி புதிய கட்டடங்கள் திறப்பு அமைச்சர் வன்னி அரசு பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4.87 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கி, 8.83 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 15 அரசு கட்டடங்களை அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அமைச்சர் வன்னி அரசு தலைமை தாங்கினார். கலெக்டர் பத்மஜா, அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித் துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் சார்பில் 8;83 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு முடிவுற்ற 15 கட்டடங்களையும், உழவர் பாதுகாப்பு திட்டம், ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க பயனாளிகள், சுய உதவிக்குழு கடன் உட்பட 291 பயனாளிகளுக்கு 4.87 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவனை நேரியில் பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சை, சுற்றுப்புற துாய்மை, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின், பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்து அங்கு உணவின் தரம், துாய்மை, குடிநீர் வசதி ஆகியவற்றை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன், சப் கலெக்டர் கார்த்திக் ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.