Economy, business and finance
ரூ.75,000 கையாடல் செய்த- பதிவறை எழுத்தருக்கு காப்பு
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற அதிகாரிகள் அசோக்குமார், கோபி ஆகியோர், நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். நீதிமன்ற ஆவணங்கள், வழக்கு வரவு கணக்குவிபரங்களை தணிக்கை செய்தனர். அதில், 75 ஆயிரம் ரூபாய் கையாடல் நடந்திருப்பது தெரிந்தது.
விசாரணையில், பதிவறை எழுத்தராக பணியாற்றிய வத்தலகுண்டைச் சேர்ந்த அழகர், 42, குற்ற வழக்குகளில் வழக்குதாரர்கள் நீதிமன்றத்தில் செலுத்திய அபராத தொகையை கருவூல வங்கிகணக்கில் செலுத்தாமல், கையாடல் செய்ததும், வங்கி முத்திரையிட்ட போலி ரசீதுகள் வைத்து ஏமாற்றியதும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், ஆறு மாதங்களாக பணிக்கு வராமல், தலைமறைவாக இருந்த அழகர் மீது, நிலக்கோட்டை போலீசில் நீதிமன்ற அதிகாரிகள் புகாரளித்தனர். போலீசார், பதிவறை எழுத்தர் அழகரை, நேற்று கைது செய்தனர்.