Science and technology
போல்டபிள் ஐபோன் இன்று அறிமுகம் செய்கிறது ஆப்பிள் நிறுவனம்
-நமது நிருபர்- மடக்கும் வகையிலான ஐபோனை இன்று (இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு) ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் அறிமுக விழாவை இன்று (செ ப்டம்பர் 09) நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில், அந்நிறுவனம் தனது முதல் மடக்கும் வகையிலான ஐபோனை அறிமுகம் செய்கிறது. இன்று நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் சாதனங்கள் பற்றிய பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.
மடிக்கும் வகையிலான ஐபோன், ஆப்பிளின் மிக விலையுயர்ந்த போனாக இருக்கும் என்றும், ஆரம்ப விலை 2 ஆயிரம் டாலராக (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,90,251) இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் இது ஐபோன் அல்ட்ரா அல்லது ஐபோன் ஃபோல்டு (iPhone Fold) என்று அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தகவல்களின்படி இதற்கு 'ஐபோன் டுயோ' என்று பெயரிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்வு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இதன்மூலம், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பார்வையாளர்கள் இந்த அறிவிப்புகளை நேரடியாகக் காண முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது அவர்களின் யூடியூப் சேனலில் நேரலையாகக் காணலாம்.
சாம்சங் நிறுவனம் முதன்முதலில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் நுழைந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் இந்த வடிவில் அறிமுக செய்ய இருக்கிறது.
இன்றைய நிகழ்வில், மேம்படுத்தப்பட்ட ஹோம்பாட், கேமரா வசதியுள்ள ஏர்பாட்ஸ் மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களையும் அறிவிக்கக்கூடும்.