Politics
பரந்தூருக்கு பதில் தமிழக அரசு தேர்வு செய்த 2 இடங்கள்... இரண்டிலும் உள்ள சிக்கல்! - அனுமதி கிடைக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2வது விமான நிலையம் அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்ட பசுமை வழி விமான நிலையத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
சென்னைக்கான 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூருக்கு பதில் தமிழக அரசு இரண்டு இடங்களை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் ஏற்படும் இடநெருக்கடி மற்றும் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2வது விமான நிலையம் அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்ட பசுமை வழி விமான நிலையத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஆகிய பகுதிகளை தமிழக அரசு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், மாநெல்லூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும், செய்யூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கல்பாக்கம் அணுமின் நிலையமும் இருப்பதால் இவ்விரண்டு இடங்களுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
