Politics
வேன் - கார் மோதி விபத்து டிரைவர் உடல் கருகி பலி
திருநெல்வேலி: தென்காசி அருகே, வேன் - கார் மோதி தீப்பிடித்ததில், கார் டிரைவர் விஜய் ஆனந்த், 40, உடல் கருகி பலியானார்.
ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து, 17 சுற்றுலா பயணியருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில், தென்காசி மாவட்டம், குற்றாலம் நோக்கி வேன் ஒன்று வந்தது.
எதிர்திசையில் குற்றாலம் சென்றுவிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த சுற்றுலா பயணியர் காரில் திரும்பினர்.
இலத்துார் விலக்கு அருகே, வேனும், காரும் நேருக்கு நேர் மோதியதில், இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இதில், காரை ஓட்டி வந்த ராஜபாளையம், ஆண்டாள்புரத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், உடல் கருகி பலியானார். வேனில் இருந்த சுற்றுலா பயணியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இலத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.