Religion
ஜலகண்டேஸ்வரர் கோவில் உட்பட 6 கோவில்களில் கும்பாபிேஷக விழா
அரியாங்குப்பம்: இடையார்பாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவில் உட்பட 6 கோவில்களில் நடந்த கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் – நாணமேடு பகுதியில், பிரசித்தி விநாயகர் கோவில், எல்லையம்மன், கங்கையம்மன், ஜலகண்டேஸ்வரர், ஐயனாரப்பன், வீரன் ஆகிய கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களின் கும்பாபிேஷக விழா, யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 15ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் (16ம் தேதி) இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று (17ம் தேதி) அதிகாலை நான்காம் கால பூஜை, கடம் புறப்பாடு, காலை 8:00 மணிக்கு மேல் ஐயனாரப்பன், வீரன் ஆகிய கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்தது.
9:00 மணிக்கு பிரசித்தி விநாயகர் கோவில், 9:30 மணிக்கு மேல் ஜலகண்டேஸ்வரர் கோவில், கங்கையம்மன், எல்லையம்மன் கோவில் மூலவர் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவில், புதுச்சேரி மாநில பா.ம.க., தலைமை நிர்வாக குழு தலைவர் கணபதி, முன்னாள் சபாநாயகர் செல்வம் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவல் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.