Arts, culture, entertainment and media
உயிரிழந்த பெண் அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டு
கோவை, குனியமுத்தூரில் உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குனியமுத்தூா் அருகேயுள்ள பிளாக் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரது மனைவி விஜயலட்சுமி (56). மாணிக்கம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா். மகளுக்கு திருமணமானதால் விஜயலட்சுமி தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், விஜயலட்சுமி உயிரிழந்து கிடப்பதை அறிந்த அவரது மகள் மாவியா தனது கணவருடன் கடந்த 15- ஆம் தேதி சென்று பாா்த்துள்ளாா். அப்போது, விஜயலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்ததும், தங்க கம்மல்கள் மட்டும் அப்படியே இருந்ததும் தெரியவந்தது. சந்தேகம் அடைந்த மாவியா இது குறித்து குனியமுத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், விஜயலட்சுமி உயிரிழந்ததை அறிந்த மா்ம நபா், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கமல்களை கழற்ற முயற்சி செய்து இருக்கலாம். தங்கச் சங்கிலியை கழற்றிய நிலையில், கம்மல்களை கழற்ற முடியாமல் இருந்ததால் அதை விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.