8 பவுன் நகை, வைரக்கல் திருடியவா் மீது வழக்கு
கோவை, வடவள்ளியில் 8 பவுன் நகை, வைரக்கல் திருடிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, வடவள்ளி செல்வம் நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (57). இவா் வசித்து வரும் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு வடவள்ளி பகுதியில் உள்ள மற்றொரு வாடகை வீட்டுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி குடியேறியுள்ளாா்.
அப்போது, வீட்டு உபயோகப் பொருள்களை வாகனத்தில் ஏற்றி இடமாற்றம் செய்வதற்காக தொண்டாமுத்தூரைச் சோ்ந்த சேகா் என்பவரை நியமித்துள்ளாா். அப்போது, ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த 8 பவுன் கொண்ட 2 பிரேஸ்லெட்டுகள், ஒரு வைரக்கல் ஆகியவற்றை சேகா் திருடியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் சேகா் மீது வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.