Arts, culture, entertainment and media
சாலமன் பாப்பையா மறைவு க்கு இரங்கல்
பொள்ளாச்சி: ‘பேராசிரியர் சாமலமன் பாப்பையா மறைவு, இயல்தமிழுக்கு பெரும் இழப்பு,’ என, கேரளா தமிழ்பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர்.
கேரள தமிழ்பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் பேச்சிமுத்து அறிக்கை:
பேராசிரியர் சாலமன் பாப்பையா, கேரளம் கொழிஞ்சாம்பாறை தமிழ் மன்றத்தில் இருமுறை பட்டிமன்றத்தில் பேச வந்துள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாராட்டையும், பெருமதிப்பையும் பெற்ற இவரிடம் காணும், எளிமை, நடுத்தர குடும்பத்தின் மாண்பு, பேச்சில் நட்பு நிரம்பி இருக்கும். அவரது மறைவு இயல் தமிழுக்கு பெருத்த இழப்பாகும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.