Arts, culture, entertainment and media
அருப்புக்கோட்டை ஆக்கிரமிப்புகளால் திணறும் மக்கள் ,கண்டுகொள்ளாத அதிகாரிகள்
அருப்புக்கோட்டை, செப்.5- அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, காசு கடை பஜார், திருச்சுழி ரோடு, மெயின் பஜார்
அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, காசு கடை பஜார், திருச்சுழி ரோடு, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கூடிக் கொண்டே செல்கிறது. ரோடு ஓரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நடைபாதை கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பும் உள்ளது. இதனால், டூ வீலர்களில் கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டி உள்ளது. இந்த வழியாக வரும் பஸ்கள் ஊர்ந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் துறை,டிராபிக் போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகள் மெத்தனமாக இருப்பதுடன் எதையும் கண்டு கொள்வது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த துறைகள் ஒன்றிணைந்து பேருக்கு கடைகளில் சன் ஷேடுகளை மட்டும் அகற்றி தன் கடமைகளை முடித்துக் கொண்டன.
அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட மாட்டாது என, ஆணித்தரமாக நம்பும் கடைக்காரர்கள் ரோடு வரை தங்கள் கடைகளை நீட்டித்துள்ளனர். நடைபாதை கடைக்காரர்கள் ரோட்டில் இருபுறமும் கடைகளை பரத்தி போக்குவரத்திற்கு மேலும் இடைஞ்சல் செய்கின்றனர். மதுரை ரோடு வழியாகத்தான் தினமும் நகராட்சி, வருவாய் துறை, டிராபிக் போலீஸ் அதிகாரிகள் வந்து செல்கின்றனர். நிலைமை தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் மட்டும் மெத்தனம் காட்டுகின்றனர்.
இதனால் பஜார் பகுதிகளில் வந்து செல்ல மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்ற வேண்டும். இதில் மெத்தனம் காட்டினால், பஸ்களை சுற்றுச்சாலையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.