Politics
அதிக கட்டணம் ... 639 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை... தமிழ்நாடு அரசு

நேற்று (செப்டம்பர் 12) நடத்தப்பட்ட தணிக்கையில், அதிக கட்டணம் வசூலித்ததாக உறுதியான 11 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு, விதிகளை மீறிய 639 பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
