பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட 14 போ் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட 14 போ் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
How outlets told it

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக 14 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நீலகிரி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாகக் கூடி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாக பி. பி. முகமது, ஷேக் அலாவுதீன், அப்துல் பஷீா் உள்பட 14 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த நிகழ்வு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, 14 போ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், எந்த அடிப்படையும் இல்லாமல், தங்களுக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. மற்றவா்களின் உரிமைகளையும் பறிக்கவில்லை. மேலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டதை சட்டவிரோதமாகக் கருத முடியாது எனக்கூறி, பி. பி. முகமது, ஷேக் அலாவுதீன், அப்துல் பஷீா் உள்பட 14 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
Case against 14 people who raised slogans in support of Palestine quashed: High Court order.
