ஆம்பூரில் 52.40 மி.மீ. மழை!
Read at DinamaniWeather and environment · 1 outlet covered this
ஆம்பூரில் 52.40 மி.மீ. மழை!
How outlets told it
ஆம்பூரில் சனிக்கிழமை 52.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. மழை - பிரதிப் படம்Published On :14 செப்டம்பர் 2026, 4:06 am IST ஆம்பூரில் சனிக்கிழமை 52.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூரில் காலை தொடங்கி மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 6.30 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் நள்ளிரவு வரையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆம்பூரில் பல்வேறு தெருக்களில் மழை நீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ் வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. ஆம்பூா் அருகே தேவலாபுரம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், விண்ணமங்கலம், மின்னூா், துத்திப்பட்டு வெங்கடசமுத்திரம், கரும்பூா், வடசேரி மேல்சாணாங்குப்பம், குமார மங்கலம், மிட்டாளம், சின்னவரிக்கம் உள்ளிட்ட ஆம்பூரை சுற்றி பெரும்பாலான கிராம பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஆம்பூா் மற்றும் கிராமங்களில் சுமாா் 1 மணி நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
