Civic issues · 1 outlet covered this

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

How outlets told it

Daily Thanthi9934h ago

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

Read at Daily Thanthi
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
Photo: Daily Thanthi

சென்னை,

சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், இந்த திருக்குடை பாத யாத்திரை ஊர்வலம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஊர்வலம் செல்லும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-

வால்டாக்ஸ் சாலை

* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஈ. வெ. ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்த லாம்.

* ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை, மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ. வெ. ரா. பெரியார் சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலையையும் பயன்படுத்தலாம்.

* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கவரும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக போகலாம்.

வேப்பேரி நெடுஞ்சாலை

* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.

* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை-ஈ. வி. கே. சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.

* ஊர்வலம் ஏ. பி சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.

* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் போக முடியாது. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக போகலாம்.

ஓட்டேரி சந்திப்பு

* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக, ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போகலாம்.

* ஊர்வலம் கொன்னூர் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை மற்றும் ஐ. சி. எப். சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து கொன்னூர் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.