Health · 1 outlet covered this

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி!

How outlets told it

Dinamani653d ago

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி!

Read at Dinamani
கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி!
Photo: Dinamani

கருப்பை வாய் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை ஆய்வகத்தில் ஆய்வுக்கு உள்படுத்தி, கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் இருக்கின்றனவா என்பதை பரிசோதிப்பது கருப்பை வாய் புற்றுநோய் சோதனை. இதனை பெரும்பாலும் மருத்துவமனைக்குச் சென்றுதான் மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஹியூமன் பாபிலோமாவைரஸ் என்பதை ஆங்கிலத்தில் HPV-யைக் கண்டறியும் பரிசோதனை என்கிறார்கள். கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வகையில் கருப்பை வாய் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வைரஸ் இது. மருத்துவமனை சென்று 'ஸ்பெகுலம்' (speculum) கருவி மூலம் செய்யப்படும் பரிசோதனையை மேற்கொள்ள ​​வேண்டியதில்லை. இதை வீட்டிலேயே பாதுகாப்பாக செய்துகொள்ளலாம். இது எளிதானதும் வலியற்றதும்கூட. துல்லியமான பரிசோதனை முடிவுகளை அளிக்கும் என்றும், இதில் பிரச்னை இல்லை என்று தெரிந்துவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே பரிசோதனை செய்வது போதுமானது என்கிறார்கள். மற்றொரு வகையிலானது, பெண்கள் பிறப்பு உறுப்பு பகுதியிலிருந்து மாதிரியைச் சேகரிக்க, 'கியூ-டிப்' (Q-tip) போன்ற சிறிய பஞ்சுத் தண்டு (swab) பயன்படுத்தப்படுகிறது. இது சுய பரிசோதனை கருவியுடனே வருகிறது.