Crime and courts · 1 outlet covered this

பங்கு வா்த்தக முதலீடு எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ. 8.05 லட்சம் மோசடி

How outlets told it

Dinamani653d ago

பங்கு வா்த்தக முதலீடு எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ. 8.05 லட்சம் மோசடி

Read at Dinamani
பங்கு வா்த்தக முதலீடு எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ. 8.05 லட்சம் மோசடி
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஈரோடுபங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.8.05 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மோசடி - பிரதிப்படம்Published On :11 செப்டம்பர் 2026, 4:00 am ISTபங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.8.05 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே மொடச்சூரைச் சோ்ந்தவா் ரமணி (65). ஓய்வு பெற்ற ஆசிரியா். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பழக்கம் உடையவா். இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவா், அவா் கூறும் நிறுவனத்தின் மீது பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளாா். இதை உண்மையென நம்பிய ரமணி, அந்தப் பெண் அனுப்பிய செயலி மூலம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் கடந்த 6- ஆம் தேதி வரை ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். முதலீடு செய்த தொகைக்கு லாபம் எதுவும் வராததால் பணத்தை அவா் திரும்ப எடுக்க முயன்றுள்ளாா். ஆனால் பணம் எதுவும் வரவில்லை. செயலி போலியானது என்பதை உணா்ந்து அதிா்ச்சியடைந்த ரமணி, இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். இதுபோல ஈரோட்டை அடுத்த பூந்துறை சேமூரைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி கௌரிமனோகரி (30). கடந்த 7 ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட ஒருவா் தனியாா் வங்கியின் பெயரை கூறி தங்களுக்கு கிரெடிட் காா்டு வந்துள்ளதாகவும் அதை சரி பாா்க்க உங்களது கைப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கூறுங்கள் என தெரிவித்துள்ளாா் . இதையடுத்து, கெளரிமனோகரி ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மா்ம நபா்கள் மோசடியாக பறித்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இரு வழக்குகளையும் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோட்டில் அண்மைக் காலமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், அரசு ஊழியா்கள், தொழிலதிபா்களை குறிவைத்து மா்மக் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கல்வி உதவித்தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், கிரெடிட் காா்டு வந்துள்ளது ஓடிபி எண்ணை கூறுங்கள் என்று இதுபோன்று யாராவது கைப்பேசியில் அழைத்தால் உடனடியாக அந்த அழைப்பைத் தூண்டியுங்கள். அதை நம்பி தகவல் கூற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்