Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் வருகை; விழாக்கோலம் பூண்டது தலைநகர் டில்லி

How outlets told it

Dinamalar652d ago

பிரிக்ஸ் மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் வருகை; விழாக்கோலம் பூண்டது தலைநகர் டில்லி

Read at Dinamalar
பிரிக்ஸ் மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் வருகை; விழாக்கோலம் பூண்டது தலைநகர் டில்லி
Photo: Dinamalar

/செய்திகள்/இந்தியா/பிரிக்ஸ் மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் வருகை; விழாக்கோலம் பூண்டது தலைநகர் டில்லிADDED : செப் 11, 2026 07:34 PM ADDED : செப் 11, 2026 07:34 PM அ நிறம் | அளவுபுதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் தங்குவதற்கு என்று பிரத்யேக ஹோட்டல்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 3000 மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. தலைநகர் டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. செப்.12 மற்றும் செப்.13 தேதிகளில் நடைபெறுகிற இந்த மாநாட்டில் உலக நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, ஈரான் அதிபர் பெசேஷ்கியன், இந்தோனேசியா அதிபர் சுபியாந்தோ, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், எகிப்து அதிபர் அப்தெல் பதாஹ் எல்சிசி உள்ளிட்ட பலரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் தலைநகர் டில்லியில் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக சொகுசு ஹோட்டல்கள் முன்கூட்டியே புக்கிங் செய்யப்பட்டு விட்டன. இதில் எந்த நாடுகளின் தலைவர்கள், எந்த ஹோட்டல்களில் தங்குகின்றனர் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்ய அதிபர் புடின், ஐடிசி மவுரியா சொகுசு ஹோட்டலில் தங்குகிறார். இங்கு ஒருநாள் இரவு தங்குவதற்கான கட்டணம் ரூ.2 லட்சம். சீன அதிபர் ஜி ஜின்பிங், தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்குகிறார். தி ஓபராய் நியூ ஹோட்டலில் பிரேசில், கஜகிஸ்தான், எத்தியோப்பியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து வரும் விருந்தினர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, ஈரான் அதிபர் பெஷேஷ்கியனும் இங்கு தான் தங்குகிறார். தாஜ்மகால் ஹோட்டலிலும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. உருகுவே, பிலிப்பைன்ஸ், கியூபா, பெலாரஸ், வியட்நாம், உலக சுகாதார அமைப்பு, உலக வர்த்தக மைய தலைவர்களுக்கும் இங்கு அறைகள் சொகுசு வசதிகளுடன் ஒதுக்கப்பட்டு உள்ளன. லீ மெரிடியன் ஹோட்டலில் ஐநா பொது செயலாளர் அன்டோனியா குட்ரெஸ், ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர், உலக வங்கி தலைவர்கள் தங்குகின்றனர். லலித் ஓட்டலில் தென்னாப்பிரிக்கா, புருண்டி நாடுகளின் பிரதிநிதிகள் தங்க வைக்கப்படுகின்றனர்.